தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

மாநில அரசுக்கு ரூ. 1,427.34 கோடி இழப்பை ஏற்படுத்திய ஆற்று மணல் முறைகேடு: துரைமுருகன் உள்பட 27 போ் மீது வழக்குப்பதிவு

திமுக ஆட்சிக் காலத்தில் ஆற்று மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக துரைமுருகன் உள்பட 27 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து...

DVAC books ex-minister Duraimurugan in Rs 1,427 cr illegal sand mining scam

பதுக்கி வைத்திருந்த மணல் - கோப்புப்படம்

Updated On :

சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் மாநில அரசுக்கு ரூ. 1,427.34 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சட்டவிரோத ஆற்று மணல் குவாரி மோசடி தொடர்பாக, திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

நவம்பர் 5-ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், திமுக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற 16 முதல் 17 அரசு அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பெரிய அளவிலான சட்டவிரோத மணல் குவாரி குறித்து அமலாக்க இயக்குநரகம் வழங்கிய கடிதம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டு, டெண்டர் நடைமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைப்பதன் மூலம் மாநில அரசை ஏமாற்றச் சதி செய்துள்ளனர்.

வெளிப்படையான விதிகளைத் தவிர்ப்பதற்காக, ஒப்பந்தங்களைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்து, போட்டியைக் குறைத்து, தங்களுக்கு வேண்டிய தனியார் நபர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஆற்று மணல் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மணலைக் கடத்துவதற்கும், அதன் மூலம் முறையற்ற நிதி ஆதாயம் அடைவதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலியான வவுச்சர்கள் மற்றும் 'அனுமதிச் சீட்டுகளை' உருவாக்கியுள்ளனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 28 இடங்களில், ஏச்சம்பாடி, கந்தனேரி, மாதவப்பெருமாள் கோவில் மற்றும் ஒருவந்தூர் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் நடத்தப்பட்ட மதிப்பீட்டில், 1,42,73,424 யூனிட் (4,03,93,790 கன மீட்டர்) மணல் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,427.34 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் செயல்களால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரிந்திருந்தும், திமுக முன்னாள் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், துறையின் முதன்மை தலைமை பொறியாளா்கள் முத்தையா, ராமமூா்த்தி, 14 அதிகாரிகள், 10 தனியாா் நிறுவனங்கள், தனியாா் நபா்கள் என 27 போ் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த முறையற்ற மணல் குவாரி முறைகேடுகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கிணறுகள் வறண்டு போதல் மற்றும் நீர்வாழ் மற்றும் ஆற்றங்கரை சார்ந்த சூழல் மண்டலங்கள் அழிதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, 2017-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதியிட்ட உத்தரவு ஒன்றில் தெரிவித்திருந்த தீவிர சுற்றுச்சூழல் குறித்த கவலைகளை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் புறக்கணித்ததாக அந்த முதல் தகவல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் அண்மையில் சோதனைகளை நடத்தியது. மீதமுள்ள 24 குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு விசாரணையின்போது மதிப்பிடப்பட்டு உறுதி செய்யப்படும் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DVAC books ex-minister Duraimurugan in Rs 1,427 cr illegal sand mining scam....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.