காய்ச்சலால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 25.50 லட்சம் இழப்பீடு: மாநில நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 25.50 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு...

உத்தரவு - கோப்புப் படம்
காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 25.50 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர், கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி காய்ச்சல், வாந்தி, தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுடன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டைபாய்டு காய்ச்சல் இருப்பதாகக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் தொடர்ந்து நீடித்ததுடன், உடல்நிலையும் மோசமடைந்து, அதே ஆண்டு (2008) ஆக. 10-ஆம் தேதி சங்கர் உயிரிழந்தார். மருத்துவமனையின் சிகிச்சையில் குறைபாடு இருந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி 2010-ஆம் ஆண்டு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நீதிபதி ஆர். சுப்பையா, “நோயாளியின் உடல்நிலையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை மருத்துவமனை உரிய முறையில் மறுமதிப்பீடு செய்யவில்லை என்றும், நரம்பியல் பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னரும் அசைக்ளோவிர் மருந்து செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மருத்துவமனை உரிய விளக்கம் அளிக்கவில்லை” என்றார்.
மேலும், மருத்துவச் சேவைக் குறைபாட்டால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ. 50 ஆயிரமும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 8 வாரங்களுக்குள் வழங்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. தவறினால் ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியுடன் தொகையைச் செலுத்தவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
Summary
The Tamil Nadu State Consumer Court has ordered a private hospital to pay a compensation of Rs. 25.50 lakh to the family of a patient who passed away after being admitted to the hospital for a fever.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

