சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

33% மேல் பயிர்ச்சேதம்: உடனடியாகக் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

இயல்பைவிடக் குறைவான பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் ச.ஜோசப் விஜய் விரிவான ஆய்வு மேற்கொண்டது பற்றி...

Over 33% Crop Damage: CM Vijay Orders Immediate Assessment and Relief

முதல்வர் விஜய்.

Updated On :

33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், உடனடியாகப் பயிர்ச்சேதக் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி உரிய நிவாரணம் வழங்கிட முதல்வர் விஜய் உத்தரவிட்டடுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் நிலை, அதன் காரணமாக வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடைத் துறைகளில் எதிர்வரும் கோடைக்காலத்தில் குடிநீர் மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலத்தின் மழைப்பொழிவு நிலவரம், அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு, நிலத்தடி நீர்மட்டம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் 25-ஆம் நாள் வரை மாநிலத்தில் இயல்பைவிட 20 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தபோதிலும், 22 மாவட்டங்களில் மட்டுமே இயல்பைவிடக் குறைவான மழை பதிவாகியுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 32.9 சதவீதமாகவும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏறத்தாழ 73 சதவீத ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வேளாண்மைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பு 18.4 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மழைப்பொழிவு குறைவால் பல மாவட்டங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் கோடைக்காலத்தில் குடிநீர் மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டமிட வேண்டியதன் அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், விரிவான ஆய்வுக்குப் பின்னர் முதல்வர் பின்வரும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

1. பயிர்ச்சேதங்களுக்கு உரிய நிவாரணம்

33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், உடனடியாகப் பயிர்ச்சேதக் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி, உரிய விதிமுறைகளின்படி தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து தகுதியுள்ள விவசாயிகளையும் சேர்க்க சிறப்பு முகாம்

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதிசெய்ய, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மற்றும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் இதனை நாள்தோறும் கண்காணித்து, தகுதியுள்ள எந்தவொரு விவசாயியும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு

மழைப்பொழிவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அடங்கிய குழு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யவும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாயிகளின் தேவைகள் மற்றும் உள்ளூர் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, விரிவான அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை விரிவாக மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளுடன் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

4. மாவட்ட ஆட்சியர்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

பருவமழை பாதிப்புகள், பயிர்ச்சேதங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் தொடர்பான நிலைமையை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

5. கோடைக்கால குடிநீர்த் தேவையை உறுதிசெய்ய விரிவான திட்டம்

எதிர்வரும் 2027-ஆம் ஆண்டின் கோடைக்காலம் முழுவதும் மாநிலம் முழுவதும் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். இதற்காக நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள், நீர்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து மாவட்ட வாரியாகவும் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாகவும் குடிநீர்த் தேவைகளைக் கணக்கிட்டு, தேவையான நீர் ஆதாரங்கள், விநியோக ஏற்பாடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6. கால்நடைத் தீவனப் பாதுகாப்பிற்கான சிறப்புத் திட்டங்கள்

எதிர்வரும் கோடைக்காலத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவன இருப்பை உறுதிசெய்ய, பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, விவசாயிகளின் நிலங்கள் மற்றும் கால்நடைத் துறைப் பண்ணைகளில் தீவனப் பயிர் சாகுபடியை விரிவுபடுத்துதல், மேய்க்கால் நிலங்களைச் சீரமைத்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சமூகத் தீவன வங்கிகளை அமைத்தல், ஒருங்கிணைந்த தீவனக் கிடங்குகள் மற்றும் சைலேஜ் உற்பத்தி அலகுகளை ஏற்படுத்துதல், மக்காச்சோள சைலேஜ் மற்றும் வைக்கோல் கொள்முதல் செய்து சேமித்தல், கால்நடைத் தீவனத்தை மானிய விலையில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தீவன உற்பத்தி மேம்பாடு மற்றும் கால்நடைத் தீவன மானியத்திற்காக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 13 கோடியே 26 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, குறிப்பாகத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் போதுமான தீவன இருப்பை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்.

மழைப்பொழிவுக் குறைவால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குதல், பயிர்க் காப்பீட்டின் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், கால்நடைகளைப் பாதுகாத்தல் மற்றும் மாநிலம் முழுவதும் கோடைக்கால குடிநீர் மற்றும் தீவனத் தேவைகளை உறுதிசெய்தல் ஆகியவற்றில் அரசு முழுக் கவனம் செலுத்தும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மாவட்டங்களின் நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்துத் துறைகளும் காலதாமதமின்றி செயல்படுத்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Chief Minister C. Joseph Vijay conducted a comprehensive review of the impacts caused by below-normal monsoon rainfall.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.