தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதுதான் நிர்வாகமா? மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!

முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் சாலைவலம் நிறைவு பெற்றது குறித்து...

Chief Minister Vijay's road tour of Madhuranthakam concludes

மதுராந்தகம் சாலை வலம் - தவெக

Published On :

முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் சாலைவலம் நிறைவு பெற்றது. மதுராந்தகம் தொகுதியில் 4 மணி நேரம் வரை சாலைவலம் நடைபெற்றது.

மாமண்டூரில் பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கி 40 இடங்களில் சாலைவலம் மேற்கொண்டார். மாலை 6.40 மணிக்கு முதல்வரின் சாலைவலம் நிறைவு பெற்றது.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று (அக். 2) பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக சாலை வலம் மேற்கொண்டார்.

மாமண்டூரில் தொடங்கி 35 கிராமங்களில் தொடர்ந்து சாலை வலம் மேற்கொண்டார். வழியில் சாலையின் இருபுறங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பூங்கொத்துகள் கொடுத்தும், மலர் தூவியும் மக்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சாலையோரக் கடைகளிலும் விவசாயிகளிடமும் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

சாலை வலத்தின்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சென்று முதல்வர் விஜய் தரிசனம் செய்தார்.

கடந்த 25ஆம் தேதி மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தவெக வேட்பாளருக்கு ஆதாரவாக முதல்வர் விஜய் பிரசாரம் செய்ததார்.

வருகின்ற அக். 4ஆம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், மதுராந்தகத்தில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முதல்வர் விஜய் மேற்கொண்டார்.

Summary

Chief Minister Vijay's road tour of Madhuranthakam concludes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER