மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாளையுடன் பிரசாரம் நிறைவு

மதுராந்தகம், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவடைவது குறித்து...

Madhuranthakam, Dharapuram by-elections

இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவு - X | TVK

Published On :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இருவரும், தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்ததால், இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அக்டோபர் 6 ஆம் தேதியில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என தவெக, அதிமுக, திமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், நாளையுடன் (அக். 4) தேர்தல் பிரசாரம் நிறைவடைவதால், இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், முதல்வர் விஜய்யும் நாளை (அக். 4) தாராபுரத்தில் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

Summary

Madhuranthakam, Dharapuram by-elections: Election campaigning concludes tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.