ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தீபாவளி: ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தீபாவளியையொட்டி, ரேஷன் கடைகளில் பாமாயில் பாக்கெட்டுகள் விநியோகிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது பற்றி...

ration shop

ரேஷன் கடை - கோப்புப்படம்

Updated On :

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் செய்ய அரசு முடிவு செய்தது. இதற்காக, சுமார் 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிட்டது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 4 நிறுவனங்களுக்கு பாமாயில் விநியோகத்துக்கான ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கப்பட்டது.

இதில், முதல் கட்டமாக 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வரும் 29-ஆம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் விநியோகம் செய்ய கடந்த செப். 29-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. விநியோகம் செய்ய வேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் பிரிக்கவில்லை எனக் கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தவை எதிர்த்து ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ள கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், பாமாயில் விநியோகம் செய்ய வேண்டிய பாக்கெட்டுகள் சரியான விகிதாசார அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 3.6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ள எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்கவும், 1.50 கோடி பாக்கெட்டுகளை விநியோகம் செய்யவேண்டி எம்ஜிஎம் ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது சரியான அல்ல.

எனவே, பாமாயில் விநியோகம் தொடர்பாக கடந்த செப். 29-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விகிதாசார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய உத்தரவிடும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர். சரவணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாமாயில் விநியோகம் தொடர்பான செப். 29-ஆம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு வரும் நவ. 2-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.

Summary

Madras HighCourt grants interim stay on distribution of palm oil through ration shops

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER