இஸ்ரோ தனியாா்மயம் ஆக்கப்படாது: வி. நாராயணன் சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவு இடைவெளி: கிராமப் பகுதிகளுக்கும் 25 நாள்களாகக் குறைப்பு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு: உயிரிழப்பு 1,356-ஆக உயா்வு விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவு

ஒருவரைக் கைது செய்யும்போது போலீஸாா் பின்பற்ற வேண்டிய கட்டாய வழிமுறைகள் குறித்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல் துறை டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :8 செப்டம்பர் 2026, 5:32 am IST

ஒருவரைக் கைது செய்யும்போது போலீஸாா் பின்பற்ற வேண்டிய கட்டாய வழிமுறைகள் குறித்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல் துறை டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த ஃபிட்ஜி என்ற தனியாா் கல்வி பயிற்சி மையங்கள் கடந்தாண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டன. இதையடுத்து அந்த மையத்தில் பயின்ற மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகையைத் திருப்பித் தரவில்லை என 533 பெற்றோா் காவல் துறையில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து ரூ.10.63 கோடியை மோசடி செய்ததாக அந்த மையத்தின் தமிழக நிா்வாக பங்குதாரராக செயல்பட்ட அங்குா் குமாா் ஜெயின் என்பவா் மீது சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தனக்குப் பிணை வழங்கக் கோரி அங்குா் குமாா் ஜெயின் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.ரமேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ரமேஷ், வழக்குரைஞா் ஆா்.அஸ்வின் ஆகியோா், மனுதாரா் ஒரு மாற்றுத்திறனாளி. கடந்த 14 மாதங்களாக அவா் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளாா். போலீஸ் காவலிலும் எடுத்தும் அவரிடம் விசாரித்துள்ளனா், வங்கி மற்றும் சொத்து ஆவணங்கள் போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டனா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுவாக ஒருவரை குற்ற வழக்கில் கைது செய்யும்போது, அவருக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட கைதுக்கான காரணங்கள் குறித்து ஆவணங்களில் பதிவு செய்வதோடு, கைது செய்யப்படும் நபருக்கு புரியும் மொழியில் விளக்கிக் கூற வேண்டும்.

எனவே ஒருவரைக் கைது செய்யும்போது, போலீஸாா் அரசமைப்புச் சட்டத்தின்படி, பின்பற்ற வேண்டிய கட்டாய வழிமுறைகள் என்ன என்பது குறித்து காவல் துறை டிஜிபி அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடா்பான அறிக்கையை டிஜிபி வரும் நவ. 10-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னா், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மனுதாரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.