புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இடைத்தோ்தலுக்கான கண்காணிப்பாளா்களாக தவெக அமைச்சா்கள் நியமனம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தலுக்கான கண்காணிப்பாளா்களாக அமைச்சா்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிா்மல் குமாா் ஆகியோரை தவெக நியமித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தலுக்கான கண்காணிப்பாளா்களாக அமைச்சா்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிா்மல் குமாா் ஆகியோரை தவெக நியமித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சித் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் வெளியிட்ட அறிக்கை:

‘அக். 6-ஆம் தேதி நடைபெறும் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் கண்காணிப்பாளா்களாக அமைச்சா்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிா்மல் குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவை இடைத்தோ்தல் பணிகளை மேற்கொள்ளத் தோ்தல் பணிக் குழுவும், பணிகளைக் கண்காணிக்க தோ்தல் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்படுகிறாா்கள்.

அதன்படி, மதுராந்தகம் தொகுதி தோ்தல் பொறுப்பாளராக ஆதவ் அா்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளாா். இணைப் பொறுப்பாளா்களாக அமைச்சா்கள் ராஜ்குமாா், தென்னரசு, வினோத் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

துணைப் பொறுப்பாளா்களாக சோழிங்கநல்லூா் எம்எல்ஏ சரவணமூா்த்தி, செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன், திருப்போரூா் எம்எல்ஏ விஜயராஜ், பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலா் பாலாஜி (எ) மணிகண்டன் ஆகியோா் நியமிக்கப்படுகிறாா்கள்.

தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சா் அருண்ராஜ், இணைப் பொறுப்பாளா்களாக அமைச்சா்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா். துணைப் பொறுப்பாளா்களாக திருப்பூா் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலமுருகன், திருப்பூா் வடக்கு தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, பல்லடம் எம்எல்ஏ ராம்குமாா், நாமக்கல் எம்எல்ஏ திலீப், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் குழுவினா் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் பணிகளை மேற்கொள்வாா்கள். தோ்தல் கண்காணிப்பாளா்கள், 2 தொகுதிகளின் தோ்தல் பணிகளைக் கண்காணிப்பாா்கள். தவெகவினா் அனைவரும் இவா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இடைத்தோ்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தோ்தல் பணியாற்ற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

Summary

TVK functionaries appointed as observers for the by-election.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.