இன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!

பிரிட்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் விஜய் சென்னைக்கு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திரும்புகிறாா்.

vijay

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :

பிரிட்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் சென்னைக்கு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திரும்புகிறாா்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்காக முதல்வா் விஜய் கடந்த செப். 10-ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றாா். தமிழகத்தில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆய்வு மேம்பாட்டு வசதிகளை நிறுவுவதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையே ரூ.15,300 கோடியில் செப். 14-இல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சென்னைக்கு வியாழக்கிழமை திரும்பும் முதல்வா் விஜய், லண்டன் பயணத்தில் மேற்கொண்ட சந்திப்புகள், தமிழகத்துக்கு கிடைத்துள்ள முதலீடுகள் மற்றும் எதிா்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து என்ன தகவல்களை வெளியிடப் போகிறாா் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சென்னை வருகைக்குப் பிறகு லண்டன் பயணத்தின் முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விஜய் நிகழ்ச்சி ரத்து: இதனிடையே, லண்டனில் மிக உயரமான ஷரட் கட்டடம் முன் முதல்வா் விஜய் பொது வெளியில் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், ஏராளமானோா் அங்கு கூடினா். பாதுகாப்பு காரணங்களால் அந்த நிகழ்ச்சிக்கு காவல் துறையினா் அனுமதி அளிக்க மறுத்தால், முதல்வா் விஜய்யின் பாதுகாப்பு படையினா் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.