சென்னை சாலைகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா? தயாராகிறது மாநகராட்சி!
சென்னை சாலைகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா? தயாராகிறது மாநகராட்சி என்பது பற்றி..

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களிலும், பேருந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரூ.150 கோடியில், சென்னை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட்டு, பருவமழைக்காலத்துக்குள் பாதுகாப்பான சாலைகள் தயாராகும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் மோசமடைந்திருக்கும் பகுதிகளை கணக்கெடுத்து அது தொடர்பான முழு விவரங்களையும் அளித்திருப்பதாகவும், நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டதும் டெண்டர் விடப்பட்டு சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, நெல்சன் மாணிக்கம் சாலை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் வெள்ளம் தேங்கும் பகுதிகளாக புளியந்தோப்பு, வேளச்சேரி, வியாசார்பாடி உள்ளிட்டப் பகுதிகளிலும் சாலைகள் செப்பனிடப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




