ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

டெங்குவால் குழந்தைகள் பலியாவதை தவெக அரசு தடுக்க வேண்டும்: கனிமொழி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் விஜய்க்கு கனிமொழி கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

Kanimozhi

பிரசாரத்தில் கனிமொழி - எக்ஸ்

Published On :

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமல்படுத்தும் முதல்வர் விஜய், டெங்குவால் குழந்தைகள் பலியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி இன்று (செப். 28) கேட்டுக்கொண்டார்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

''வீட்டில் உள்ள குட்டி குழந்தைகளிடமும் வாக்கு சேகரித்தார் முதல்வர் விஜய். மாமாவுக்கு வாக்களிக்குமாறு அடம்பிடியுங்கள் என்று கேட்டார்.

மதுரையில் 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கழிவுநீர் குட்டையில் இருக்கிறார். கொலைக்கு நியாயம் கிடைக்க அவன் பெற்றோர் போராடுகிறார்கள். ஆனால், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

நேற்று தாராபுரம் தொகுதியில் போராடியவர்களை கைது செய்துள்ளனர். மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்துக்குச் செல்லும்போது, மாற்றுத் திறனாளி குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிறது. செல்லும் வழியில் குற்றச்சம்பவம் நடந்துவிட்டது என்று தெரியக்கூடாது என்பதற்காக, மாற்றம் எனக் கூறிக்கொண்டு உருவான அரசு, தேர்வுக்காக பயந்து சிறுமி பொய் கூறியதாக மாற்றிவிட்டனர்.

எந்த குழந்தைகளிடம் கெஞ்சி வாக்குகள் பெற்றனரோ, அந்த குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லை.

டெங்குவால் ஒரு வயது குழந்தை, இரண்டு வயது குழந்தை இறக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நகைக்கடைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாரையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காக பெண்களுக்கு பல சலுகைகளை அறிவித்தது திமுக. நமது வேட்பாளர் சுகன்யா, தாய்மாமனுக்கு சீர் கொடுக்கும் அளவுக்கு படித்து உயர்ந்துள்ளார். தாய்மாமன் சீர் என்ற பெயரில் 50 ஆண்டுகளுக்கு பெண்களை பின்னோக்கி இழுக்கிறார் விஜய்.

பாஜகவுக்கு திமுக பயந்துகொண்டிருப்பதாக முதல்வர் விஜய் கூறுகிறார். எதிர்க்கட்சியிலே இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தது திமுக.

நாடாளுமன்றத்தில் மோடி, அமித் ஷா என யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுப்பது திமுக'' என கனிமொழி பேசினார்.

Summary

Child deaths due to dengue must be prevented Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.