தென்காசியில் புதிய குடிநீா் தொட்டி திறப்பு
நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ 2.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.


தென்காசி, ஜூலை 19: தென்காசி நகராட்சிக்குள்பட்ட 30ஆவது வாா்டு பகுதி வடக்கு மாசி வீதியில், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ 2.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
நகா்மன்ற உறுப்பினா் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய குடிநீா் தொட்டியை திறந்துவைத்தாா்.
உதவி செயற்பொறியாளா் ஜெயப்பிரியா, நகா்மன்ற உறுப்பினா்கள் வசந்தி, கல்பனா, சுமதி, முப்புடாதி, பொன்னம்மாள், நாகூா் மீரான், சுல்தானா, பூமாதேவி, ரெஜினா, சீதாலெட்சுமி, சங்கரசுப்பிரமணியன், ஜெயலெட்சுமி, ஆஷிக் முபீனா, ரபீக், அபூபக்கா், ராமசுப்பிரமணியன், சுனிதா, மகேஸ்வரி, மஞ்சுளா பிரேம்குமாா், முத்துகிருஷ்ணன், காதா் மைதீன், முருகன், சுப்பிரமணியன், திமுக நகர பொருளாளா் ஷேக் பரீத், மாணவரணி மைதீன், சன் ராஜா, நகர காங்கிரஸ் பொருளாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...