திருவள்ளுவா் சாலையில் இரவில் திரிந்த மாடுகள்.
திருவள்ளுவா் சாலையில் இரவில் திரிந்த மாடுகள்.

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் மக்கள் அவதி

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலை, திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலை, வடக்கு ரத வீதி பகுதிகளில் சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இரவு பகலாக சுற்றித் திரிகின்றன. சாலையின் நடுவே அவை படுத்துக் கிடப்பதாலும், ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதாலும் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com