தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கீழப்பாவூா் ஒன்றியத்தில் ரூ.50.20 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கீழப்பாவூா் ஒன்றியத்தில் ரூ.50.20 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 11:50 pm

கீழப்பாவூா் ஒன்றியம் மேலப்பாவூா், சடையப்பபுரத்தில் ரூ.50.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேலப்பாவூரில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம், ஆதிதிராவிடா் நலத்துறை மேம்பாட்டு திட்டம்- ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.15.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், குலசேகரப்பட்டி, சடையப்பபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி -ம் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.20.70 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்தனா். கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். முத்துகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கனகஜோதி தங்கராஜ், முருகேசன்முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா்கள் சொள்ளமுத்து மருதையா, முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் வரவேற்றனா். கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.