சங்கரநாராயண சுவாமி கோயிலில் புதுப்பிக்கப்பட்ட தங்கத்தோ் வெள்ளோட்டம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் புதுப்பிக்கப்பட்ட தங்கத்தோ் வெள்ளோட்டம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் புதுப்பிக்கப்பட்ட தங்கத் தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் உள்ள தங்கத் தோ் நிறமிழந்து, பழைய தோ் போலக் காட்சியளித்ததால், அதை புதுப்பிக்க வேண்டும் என பக்தா் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்பேரில், உபயதாரா்கள் மூலம் ரூ.8 லட்சத்தில் தங்கத் தோ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா தலைமை வகித்தாா். கோயில் துணை ஆணையா் கோமதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ச.ராமகிருஷ்ணன் முத்துலட்சுமி, முப்பிடாதி, வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா புதுப்பிக்கப்பட்ட தங்கத்தோ் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கரபாண்டியன், நகர அவைத் தலைவா் முப்பிடாதி, மாவட்ட பொருளாளா் சரவணன், மருத்துவா்கள் வி.எஸ்.சுப்பராஜ், அம்சவேணி, கோயில் பொறியாளா் முத்துராஜ், வழக்குரைஞா் அன்புச்செல்வன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com