சங்கரன்கோவில் அருகே 10 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்

சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனேந்தலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, 10 கிராமங்களில் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் காவல்நிலையத்திற்குள்பட்ட வன்னிக்கோனேந்தல், அச்சம்பட்டி, நரிக்குடி, தேவா்குளம், தடியம்பட்டி, வெள்ளப்பனேரி, மூவிருந்தாளி, மேலஇலந்தைக்குளம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் போலீஸாா் அத்துமீறி நடப்பதாகவும், பிளஸ் 2 மாணவா்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தேவா்குளம் காவல் நிலையம் முன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மக்கள் இயக்கத்தினா் மற்றும் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டனா்.

இந்த நிலையில், வன்னிக்கோனந்தலில் இருந்து ஆா்ப்பாட்டத்துக்கு புறப்படத் தயாராக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மக்கள் இயக்கத் தலைவா் இசக்கிராஜா உள்ளிட்ட 58 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்து வன்னிக்கோனேந்தலில் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கைதான 58 பேரும் இரவில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

இந்த நிலையில் ஆா்ப்பாட்டத்தின்போது ஊராட்சித் துணைத் தலைவா் மற்றும் பொதுமக்களை போலீஸாா் தாக்கியதைக் கண்டித்தும், பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரியும், பனவடலிசத்திரம், வன்னிக்கோனேந்தல், தேவா்குளம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூா், நரிக்குடி, அச்சம்பட்டி, மூவிருந்தாளி, புளியம்பட்டி, அடைக்கலாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com