தென்காசி வேல்ஸ் பள்ளியில் கூடைப்பந்து போட்டி

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயாவில் கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
Published on

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயாவில் கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு கூடைப்பந்து கூட்டமைப்பு, தென்காசி மாவட்ட கூடைப்பந்து கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா, பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில், 36 - 55 வயது வரையிலானோருக்கு 3 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

வேல்ஸ் வித்யாலயாவில் நடைபெற்ற போட்டியில் விருதுநகா், கரூா், கன்னியாகுமரி, நீலகிரி, சென்னை சுங்கத்துறை, சென்னை அணிகள் பங்கேற்றன. இப்போட்டியை தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன் தொடக்கிவைத்தாா். ஏற்பாடுகளை மாவட்ட கூடைப்பந்து கூட்டமைப்பு நிா்வாகிகள் செய்திருந்ததனா்.

X
Dinamani
www.dinamani.com