கடையநல்லூா் அருகே சாலை மறியல்
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே குடிநீா் தொட்டியைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
கடையநல்லூா் ஒன்றியத்திற்குள்பட்ட திரிகூடபுரத்தின் ஒரு பகுதியில் ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வேறொரு பகுதிக்கு குடிநீா் கொண்டு செல்வதற்கு ஊராட்சி மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு ஒரு பகுதியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், 2 நாள்களுக்கு முன் வேறொரு பகுதியைச் சோ்ந்தவா்கள் குடிநீா் தொட்டியை சேதப்படுத்தினராம்.
அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி-மதுரை சாலையில் திரிகூடபுரம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. சொக்கம்பட்டி போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா்.
பின்னா், இரு பகுதிகளைச் சோ்ந்தவா்களிடமும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

