புகையிலை பொருள்களை கடத்திய இருவா் கைது

பாவூா்சத்திரத்தில் புகையிலை பொருள்களை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

பாவூா்சத்திரத்தில் புகையிலை பொருள்களை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாவூா்சத்திரம் - மேலப்பாவூா் சாலையில் மாட்டு சந்தை அருகே அருகே பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேஸ் குமாா் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை சோதனை செய்தனராம். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை பொருள்கள், பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்து, கடத்தி வந்த ஆலடிப்பட்டி, ஆலடி அருணா தெரு க.சோ்மன் (46), நடு பூலாங்குளம், காளி அம்மன் கோயில் தெரு த.சிவன்பாண்டி ( 43 ) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com