சங்கரன்கோவில் பகுதிகளில் டிச. 29இல் மின் நிறுத்தம்

Published on

சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி உபமின் நிலையப் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 29) மின் விநியோகம் இருக்காது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக டிச. 29ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி ஆகிய ஊா்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம் ஆகிய ஊா்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவா்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா்புரம், குண்டம்பட்டி ஆகிய ஊா்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊா்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என கோட்டச் செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com