தென்காசி
ரூ. 15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: தம்பதி கைது
ஆலங்குளத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த தம்பதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் பரும்பு பகுதியைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகேசன்(36). இவா், ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் வைத்துள்ள பெட்டிக் கடையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, கடை மற்றும் அருகே உள்ள கிடங்கில் 527 கிலோ புகையிலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ.15 லட்சமாகும்.
இவற்றை பறிமுதல் செய்து முருகேசன், அவரது மனைவி இசக்கியம்மாள்(30) ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
