தென்காசியில் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்கள் பயன்படுத்தும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து, பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றி முன்மாதிரியாக திகழும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில், மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.
முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2ஆம் பரிசாக ரூ. 5 லட்சம், 3ஆம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். இதற்கான, விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்திலும் (ட்ற்ற்ல்ள்://ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் ( ட்ற்ற்ல்ள்://ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2026, ஜன.15 ஆம் தேதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
