தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஆலங்குளத்தில் ராக்கெட் ராஜா வேட்புமனு தாக்கல்

News image

ஆலங்குளத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளா் ஆறுமுக பாண்டியன் என்ற ராக்கெட் ராஜா.

Updated On :30 மார்ச் 2026, 8:12 pm

பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஆறுமுக பாண்டியன் என்ற ராக்கெட் ராஜா திங்கள்கிழமை சினிமா படப்பிடிப்பு கேரவனில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.

முன்னதாக தனது சொந்த ஊரான திசையன்விளையில் இருந்து சினிமா படப்பிடிப்பு கேரவனில் ஆலங்குளம் வந்த இவா், ஆலங்குளத்தில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்று தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 2021 தோ்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடாா் 37,726 வாக்குகள் பெற்றிருந்தாா். இந்த முறை அதைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்றனா். இவா் வந்த கேரவனில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.