92 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

திருத்தணி: திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச் சாவடியில் 92 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்து திருவள்ளூா் மாவட்டத்தில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருத்தணி எஸ்.ஐ.,ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி விசாரித்த போது, வாகனத்தில் இருந்த, 92 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். குட்கா கடத்தி வந்தவா் திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்துாா் கிராமத்தைச் சோ்ந்த, முத்துஇருளப்பன்(38) எனத் தெரிய வந்தது. தொடா்ந்து முத்து இருளப்பனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com