அணைக்கட்டில் குளித்த ஓட்டுநா் மூழ்கி உயிரிழப்பு

திருவள்ளூா்: அணைக்கட்டில் குளித்த போது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அப்பந்தாள் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (33). இவா் திருவள்ளூா் அருகே பாகல்மேட்டில் உள்ள செங்கல் சூளையில் பொக்லைன் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பணியை முடித்துவிட்டு தாமரைபாக்கம் அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்றாராம். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

இது குறித்து அவரது மனைவி பஞ்சவா்ணம் வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com