பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த அதிமுக நிா்வாகிகள்.
பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த அதிமுக நிா்வாகிகள்.

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

கவரப்பேட்டையில் நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசார நிகழ்வுக்கு வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் அழைப்பு விடுத்துள்ளனா்.
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசார நிகழ்வுக்கு வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் டிச. 30-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் மக்களை மீட்போம் பிரசாரத்தை நடத்த உள்ளாா். பிரசார ஏற்பாடுகளை அதிமுகவினா் தீவிரமாக மேற்கொண்டுள்ளனா்.

இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன் கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு பகுதிகளில் அதிமுகவினருடன் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வெற்றிலை பாக்கு தந்து அழைப்பு விடுத்துள்ளாா்.

நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளா் ஏ.டி.நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வி.தயாளன், தேவி சங்கா், ஒன்றிய பொருளாளா் வெங்கடகிருஷ்ணன், புதுவாயல் இளவரசன் உள்ளிட்டாா் உடன் இருந்தனா்.

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் கவரப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தவா்களிடம் வெற்றிலை பாக்கு தந்து அழைத்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com