/

ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தினா்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.
Updated On :21 ஜனவரி 2025, 8:21 pm

Din

திருவள்ளூா்: நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை திருவள்ளூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளா் வாசுதேவன் தலைமை வகித்தாா். அப்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து கரோனா காலத்தில் விடுபட்ட 21 மாத அகல விலைப்படி உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பிட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு 70 வயது கடந்தவா்களுக்கு 10 சதவீதமும், 80 வயது கடந்தவா்களுக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளா் தேவசுந்தரம், மாவட்ட செயலாளா் கணேசன், ஓய்வு பெற்ற சத்துணவு மாவட்ட செயலாளா் லூா்துசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.