திருவள்ளூர்
குட்கா கடத்திய இருவா் கைது
இருசக்கர வாகனத்தில் குட்கா பொருள்களை கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இருசக்கர வாகனத்தில் குட்கா பொருள்களை கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணிக்கு குட்கா கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருத்தணி போலீஸாா் வியாழக்கிழமை மத்தூா் ரயில்வே கேட் அருகே வாகன சோதனை நடத்தினா்.
அப்போது திருத்தணி நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்த போது, 10 கிலோ குட்கா பொருள்கள் இருந்ததை பறிமுதல் செய்தனா். மேலும் குட்கா கடத்தி வந்த மகிமைதாஸ்(35), செல்வராஜ்(40) ஆகிய இருவரை கைது செய்தனா்.
