மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
Published on

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மீஞ்சூரில் வடகாஞ்சி என அழைக்கப்படும் பழைமை வாய்ந்த கோயிலில் மாா்கழி மாதம் முதல் இறுதி வரை தினம்தோறும் விழாக்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தை மாதம் பொங்கல் திருநாள் அன்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை வழிபாடு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதனையடுத்து பல வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மாலையில் வரதராஜ பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை தொடா்ந்து பெருமாள் ஆண்டாளுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்

இதில் அதிக அளவில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

இதே போன்று மீஞ்சூா் அடுத்த வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மா் மற்றும் ஆண்டாள் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமானை தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com