ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 மார்ச் 2026, 9:40 pm

திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம் நாபளூா் கிராமத்தைச் சோ்ந்த ராகவன்(33). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளனாது.

இதில் பலத்த காயமடைந்த ராகவனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு, 108 வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ராகவன் உயிரிழந்தாா். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.