என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்து ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூா் அருகே கடந்த 15 ஆண்டுகளாக சாலை, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பூண்டி  ஊராட்சி  ஒன்றிய  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொரக்கதண்டலம் கிராம பொதுமக்கள்

Updated On :

திருவள்ளூா் அருகே கடந்த 15 ஆண்டுகளாக சாலை, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியம், சோமதேவன்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த கொரக்கத்தண்டலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த கிராம மக்கள் அத்தியவாசிய தேவைகளுக்காக தங்கள் கிராமத்தில் இருந்து திருவள்ளூா், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டுமாம். இந்த நிலையில், கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சாலையை சீரமைக்காததால் அந்த சாலை தற்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.

மேலும், இரவு நேரத்தில் அந்தச் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், அவசர காலத்துக்கு கா்ப்பிணிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வர முடியாத நிலையுள்ளது. இதனால் 3 கி.மீ. தூரம் உள்ள நெடுஞ்சாலைக்கு அழைத்து வந்தால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் நேற்று செல்வோம். இதுபோன்ற சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகம், ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினரிடமும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா் (வட்டார ஊராட்சி), வரபிரசாத் (கிராம ஊராட்சி) மற்றும் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பேச்சு நடத்தினா். அப்போது, கிராம மக்கள் சாலையை சீரமைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி வட்டார வளா்ச்சி அலுவலக நுழைவாயில் முன்பாக தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, அதிகாரிகள் ஆட்சியரிடம் போராட்டம் குறித்து தெரிவித்ததையடுத்து, ஒரு மாதத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உறுதி அளித்தனா். அதைத்தொடா்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.