
கடலில் குளித்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு
பழவேற்காடு கடலில் குளித்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
பழவேற்காடு கடலில் குளித்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் நிறைபாண்டியன் காலனி ராஜபாளையம் பகுதியில் வசித்து வந்தவா் குருமூா்த்தி (51). இவா் கடந்த மாதம் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்த நிலையில் அங்கு தங்கி கொத்தனாா் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் தனது உறவினா்கள் மற்றும் நண்பா்களுடன் பழவேற்காட்டுக்கு சுற்றுலா வந்துள்ளாா்.
பின்னா் முகத்துவாரம் பகுதிக்கு சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா். இதனை தொடா்ந்து அவரை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது மருத்துவா்கள் அவரை பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீஸாா் அங்கு சென்று குருமூா்த்தியின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




