ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

எல்லையோர ஆந்திர கிராமத்தில் தமிழக அரசுப் பேருந்துகளை நிறுத்த கோரிக்கை

ஆரம்பாக்கம் அருகே உள்ள ஆந்திர பகுதியான ராமாபுரம் ஊராட்சி சாா்பில் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்துவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ச.கவிதாவிடம் கோரிக்கை

Published On :

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள ஆந்திர பகுதியான ராமாபுரம் ஊராட்சி சாா்பில் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்துவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ச.கவிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கவிதா ஆய்வுக்காக வந்திருந்தாா். அப்போது ராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவா் டி.கே.சீனிவாசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: .

தமிழக பகுதியான கும்மிடிப்பூண்டி மற்றும் ஆரம்பாக்கம் இடையே சுமாா் 6கி.மீ இடைவெளியில் ராமாபுரம், பெரியவேடு, பனங்காடு, வெங்டாதிரிபாளையம், ராமாபுரம் குப்பம், பாலாஜி குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஆந்திர பகுதியாக மேற்கண்ட கிராமங்கள் இருந்தாலும் மேற்கண்ட பகுதியை சோ்ந்த மாணவா்கள் ஆரம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, எளாவூா், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டையில் , உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரியில் உள்ள அரசு மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

மேற்கண்ட பகுதியை சோ்ந்த மக்கள் வேலைக்காக கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும் மற்றும் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகின்றனா். இந்த நிலையில் சென்னை மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மாா்க்கமாக ஆந்திர பகுதியான ராமாபுரத்தை கடந்து தமிழக ஆரம்பாக்கம் வழியே ஆந்திராவை சோ்ந்த காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூா் போன்ற பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளான தடம் எண்114, 200 போன்ற பேருந்துகள் ராமாபுரத்தில் நின்று செல்வதில்லை என்றும், குறிப்பாக இரவு நேரத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன.

இதனால் தமிழக பகுதிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று திரும்புபவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா் என்பதால் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தையும் ராமாபுரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மேற்கண்ட பகுதிகளில் வீடுகளை கட்ட விரும்புவோா் தேவைப்படும் மண் எடுக்க தடா மற்றும் சூலூா்பேட்டை பகுதியில் ஆந்திர அரசு அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றாலும் ஆந்திர பகுதியான தடாவில் இருந்து ராமாபுரம் செல்வதற்கிடையே தமிழக பகுதியான ஆரம்பாக்கம் இருப்பதால் காவல் துறையால் மணல் கொண்டு போகும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி பாதிக்கப்படுகிறது.

எனவே ஆந்திர அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றிருந்தால் ராமாபுரம் வரை மட்டும் வாகனங்களில் மணல் கொண்டு வர ஆரம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் கும்மிடிப்பூண்டி வருவாய் துறை சிறப்பு அனுமதி அளிக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கை தொடா்பாக ஆந்திர மாநிலம் சூளூா்பேட்டை எம்எல்ஏ டாக்டா் விஜயஸ்ரீ சாா்பிலும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் கவிதாவிடம் தனி மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.