விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வளம் தரும் தேமோர் கரைசல்...

சிதம்பரம், ஜன.6: அதிக லாபம் பெற்று தரும் தேமோர் கரைசல் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் டி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார். ÷இது குறித்து அவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:40 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஜன.6: அதிக லாபம் பெற்று தரும் தேமோர் கரைசல் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் டி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

÷இது குறித்து அவர் தெரிவித்த விவரங்கள்: சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்றும் தரும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

÷குறிப்பாக விவசாயிகளிடம் உள்ள வேளாண் இடு பொருள்களை கொண்டு செய்யப்படுவதாலும், பின்விளைவுகள் இல்லாத காரணத்தாலும், நல்ல விளைச்சல் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிரைப் பாதுகாத்து அதிக லாபம் பெற்று தரும் தேமோர் கரைசல் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டில் பாரம்பரியம் மற்றும் முன்னோடி விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி: தேங்காய்ப்பால், மோர் கலந்த இயற்கை கலவைதான் தேமோர் கரைசல் என்றழைக்கப்படுகிறது. நன்கு புளித்த மோர் 5 லிட்டரும் தேங்காய் எண்ணிக்கை 10-ம் இக் கரைசலுக்கு தேவைப்படும் பொருள்கள் ஆகும்.

÷விவசாயிகள் தேங்காயை துருவி அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலக்கி 5 லிட்டர் தேங்காய்ப் பாலை எடுத்து மோருடன் நன்றாக கலக்கவும் இந்த கரைசலை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவாரம் வரை ஊறவிடவும். ÷இந்த கரைசல் மீது தூசி ஏதும் விழாமல் வைக்க வேண்டும். பின்னர் 7 நாள்கள் கழித்து கரைசல் நன்றாக புளித்திருக்கும். இதுதான் தேமோர் கரைசல் என்றழைக்கப்படுகிறது. ஒரு லிட்டர் தேமோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு தெளிப்பான் மூலமாக தெளிக்கும் போது 10 தெளிப்பான் அளவுக்கு தெளிக்க வேண்டும்.

பயன்கள்: தேமோர் கரைசலால் பயிர்களை நன்றாக வளரச் செய்யும் தன்மையும், பூச்சிகளை விரட்டும் தன்மையும் காண்படுவதால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும்.

÷"சைட்டோசைம்' என்ற அழைக்கப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி உள்ள ஆற்றலை தேமோர் கரைசலும் பெற்று உள்ளதால் நன்றாக வளராத பயிர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வேலைவாய்ப்பு: கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்கள் தேமோர் கரைசலை தயாரித்து விற்பனை செய்வதன் வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் நல்ல லாபம் பெற முடியும். பல பெரும் நிறுவனங்களில் உள்ள தோட்டங்களில் தேமோர் கரைசல் தெளிக்க ஒப்பந்தம் செய்தும், பல பெரும் விவசாய நிலபரப்புகள் கொண்ட வேளாண் சங்கங்களுடன் இணைந்து தேமோர் கரைசல் உற்பத்தி மற்றும் பயன்பாடுகள் வாயிலாக சுற்றுச்சூழல் மாறுபாடுகளை தவிர்த்து அதிக லாபம் பெறலாம் என விரிவுரையாளர் டி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.