நஷ்டத்தில் இயங்கும் ஆர் - காமை வாங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ

அனில் அம்பானிக்குச் சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (ஆர்-காம்) இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அந்த
நஷ்டத்தில் இயங்கும் ஆர் - காமை வாங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ
Updated on
1 min read

அனில் அம்பானிக்குச் சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (ஆர்-காம்) இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அந்த நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளது.
இதன் மூலம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிடம் உள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு, செல்லிடப்பேசி கோபுரங்கள், கண்ணாடி இழை (ஆப்டிகல் ஃபைபர்) இணைப்புகள் ஆகியவை ரிலையன்ஸ் ஜியோவின் சொத்துகளாகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எவ்வளவு தொகைக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸை வாங்குகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்றாலும், இதுதொடர்பான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.24,000 கோடியிலிருந்து, ரூ.25,000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com