புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆகஸ்ட் மாதத்துக்குள் ரூ.25,000 கோடி சொத்துகள் விற்பனை: ஆர்காம்

கடனில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனத்தின் ரூ.25,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இம்மாத இறுதிக்குள் விற்பனை செய்யப்பட்டு விடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ள

News image
Updated On :7 ஆகஸ்ட் 2018, 12:52 am IST


கடனில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனத்தின் ரூ.25,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இம்மாத இறுதிக்குள் விற்பனை செய்யப்பட்டு விடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் எரிக்ஸன் நிறுவனத்துக்கு தர வேண்டிய செட்டில்மென்ட் தொகையான ரூ.550 கோடியை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்கவும் ஆர்காம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தகவலை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், செபி-யிடம் தெரிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா தொடர்பாக ஆர்காம் மற்றும் எரிக்ஸன் இந்தியா நிறுவனங்களிடையே மோதல் ஏற்பட்டது. 
இதையடுத்து, அந்த இரண்டு நிறுவனங்களும் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. அதன்படி, ஆர்காம் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம், தொலைத் தொடர்பு கோபுரங்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட ரூ.25,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை அந்நிறுவனம் பெற்றது. 
மேலும், எரிக்ஸன் நிறுவனத்துக்கு தரவேண்டிய ரூ.550 கோடியை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனில் அம்பானி தலைமையிலான ஆர்காம் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
இந்த நிலையில், ஆர்காம் நிறுவனம், இம்மாதத்துக்குள் சொத்துகளை விற்று எரிக்ஸன் நிறுவனத்துக்கு சேரவேண்டிய பாக்கி தொகையை உரிய காலத்தில் செலுத்துவதாக செபியிடம் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.