முடிவடையும் பணப் புழக்கம்: உலகின் வளர்ந்த மற்றும் முக்கியப் பொருளாதாரங்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய பிராந்தியம், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சவூதி அரேபியா, சீனா, துபாய், ரஷியா, தென் கொரியா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகள்கூட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், கரோனாவால் உலகச் சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், பங்குச் சந்தை கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சியைக் காணும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.