அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்செக்ஸில் பெரிய மாற்றமில்லை

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 10:32 pm

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சரிவிலிருந்து மீண்டு பெரிய அளவில் மாற்றமின்றி 9.71 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது.
 திங்கள்கிழமை சந்தை முடுவுற்ற பிறகு சில்லரை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெளியானது. அதில், நவம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.93 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பைவிட சற்று அதிகம்தான். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.2,264.38 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். இவை அனைத்தும் சந்தைக்கு சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் வர்த்தகம் நேர்மறையுடன் தொடங்கியது. ஆனால், லாபப் பதிவால் ஒரு கட்டத்தில் எதிர்மறையை சந்தித்து. பின்னர் மீட்சி பெற்று நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு 183.60 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,142 பங்குகளில் 1555 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,417 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 201 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 412 பங்குகள் வெகுவாக உயர்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.183.60 லட்சம் கோடியாக இருந்தது.
 சென்செக்ஸ் காலையில் 33.93 புள்ளிகள் கூடுதலுடன் 46,287.39-இல் தொடங்கி ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் 45,841.67 வரை கீழே சென்றது. பின்னர், மீட்சி பெற்று அதிகபட்சமாக 46,350.30 வரை உயர்ந்தது. இறுதியில் 9.71 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயர்வுடன் 46,263.17-இல் நிலைபெற்றது.
 பஜாஜ் ஃபைனான்ஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பஜாஜ் ஃபைனான்ஸ் 4.69 சதவீதம், பஜாஜ் ஃபின் சர்வ் 4.15 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, எச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, எம் அண்ட் எம், மாருதி சுஸுகி ஆகியவை 1 முதல் 2.20 சதவீதம் வரை உயர்ந்தன.
 அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்), நெஸ்லே இந்தியா ஆகிய இரண்டு 2.12 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, டிசிஎஸ், ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 828 பங்குகள் ஆதாயம் பெற்றன. 915 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 9.70 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயர்ந்து 13,567.85- இல் நிலைபெற்றது. அதிகபட்சமாக 13,589.65 வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் போது 13,547.20 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி மீடியா குறியீடு மட்டும்1.71 சதவீதம் உயர்ந்தது. எஃப்எம்சிஜி குறியீடு 1.29 சதவீதம் குறைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.