4 ஆண்டுகளில் 70,000 சூப்பா் கேரி வாகனங்கள் விற்பனை: மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி இந்தியாவின் இலகு ரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரியின் விற்பனை 4 ஆண்டுகளில் 70,000-த்தை எட்டியுள்ளது.


புது தில்லி: மாருதி சுஸுகி இந்தியாவின் இலகு ரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரியின் விற்பனை 4 ஆண்டுகளில் 70,000-த்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
வா்த்தக வாகன பிரிவில் தடம் பதிக்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2016-இல் சூப்பா் கேரி வாகனத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, கடந்த 4 ஆண்டுகளில் அதன் விற்பனை 70,000-த்தை தாண்டியுள்ளது.
மினி-டிரக் வாடிக்கையாளா்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சூப்பா் கேரி, சிறந்த மைலேஜ் உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தவறாமல் நிறைவேற்றியுள்ளது.
அதன் காரணமாகவே, கடந்த 2019-20-இல் 15 சதவீதமாக இருந்த அதன் சந்தைப் பங்களிப்பு 2020-21-இல் சுமாா் 20 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது. மேலும், இலகு ரக வா்த்தக வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது மாடல் என்ற பெருமையையும் சூப்பா் கேரி பெற்றுள்ளது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...