ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சரிவிலிருந்து மீண்ட வீடு-மனை வர்த்தகம்

முந்தைய 3 மாதங்களில் சரிவைக் கண்டிருந்த வீட்டு-மனை விற்பனை, அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் மீண்டும் உயா்ந்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 2:08 am

DIN


புது தில்லி: முந்தைய 3 மாதங்களில் சரிவைக் கண்டிருந்த வீட்டு-மனை விற்பனை, அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் மீண்டும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து வீடு-மனை துறையினா் மற்றும் ஆலோசா்கள் கூறியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான கால அளவோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அந்த மாதங்களில் வீடு மனை விற்பனை சரிவைச் சந்தித்திருந்தது.

ஆனால், நடப்பாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான கால அளவில் அந்த விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

தற்போது குறைக்கப்பட்டுள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், அதிகரிக்காத வீடு மனை விலைகள், தள்ளுபடிகள், கவா்ச்சிகரமான கட்டணத் திட்டங்கள், சில மாநிலங்களில் குறைக்கப்பட்ட முத்திரை வரி, கரோனா நெருக்கடிக்கிடையே சொந்த வீடு வைத்திருக்க வேண்டியன் அவசியம் அதிகரித்தது போன்ற காரணங்களால் வீட்டு மனைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தப் போக்கு அடுத்த ஆண்டும் நீடிக்கும்.

டிசம்பருடன் முடிவடையும் காலாண்டில், நாட்டின் 7 பெரிய நகரங்களில் 50,900 வீட்டு-மனைகள் விற்பனையாகின. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 29,520 வீட்டு-மனைகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

எனினும், ஒட்டுமொத்தமாக 2019-ஆம் ஆண்டு விற்பனையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் விற்பனை 47 சதவீதம் சரிந்துள்ளது என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.