நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் பத்தி தெரிஞ்சுக்கோங்க..!
நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.


நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
5ஜி தொழில்நுட்பம், 6.65-இன்ச் எச்டி டிஸ்பிளே, 1080 பிக்சல் அளவு, சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியினால் வேகமாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது,.
முதல்முறையாக அதிகபட்சமாக 64 எம்.பி பிரைமரி கேமராக்களுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும். அதில் 32 எம்.பி செல்பி கேமராவும் அடங்கும்.
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக், 55W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும். மற்ற 5ஜி ஸ்மார்ட் போன்களை ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. எனினும் இந்த விலை மற்றும் முழு அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ள மார்ச் 12 வரை காத்திருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...