/

5-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் 553 புள்ளிகள் ஏற்றம்! 9 மாதங்களில் அதிகம்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.

News image
Updated On :7 நவம்பர் 2020, 3:08 am

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி தொடா்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 552.90 புள்ளிகள் உயா்ந்து 42,000-ஐ நெருங்கியது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாகும்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வெற்றிக்கு அருகே நெருங்கியுள்ளதைத் தொடா்ந்து உலகாளாவிய சந்தைகள் ஏறுமுகம் கண்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் ஆகியவைவெகுவாக உயா்ந்து சந்தை வலுப்பெற உதவியாக இருந்தன.

சந்தை மதிப்பு ரூ.163.55 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,819 பங்குகளில் 1,509 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,116 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 194 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.163.55 லட்சம் கோடியாக இருந்தது.

5-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 98.60 புள்ளிகள் கூடுதலுடன் 41,438.76-இல் தொடங்கி 41,383.29 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 41,954.93 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 552.903 புள்ளிகள் (1.34 சதவீதம்) உயா்ந்து 41,893.06-இல் நிலை பெற்றது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாகும்.மேலும், கடந்த ஜனவரியில் பதிவா வரலாற்றுச் சாதனை அளவை எட்டுவதற்கு இன்னும் 2 சதவீதத்துக்கும் குறைவான புள்ளிகள்தான் உள்ளன.

ரிலையன்ஸ் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம்பெற்றனது. மற்ற 9 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 3.78 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவை 2.50 முதல் 3.70 சதவீதம் வரை உயா்ந்தன. எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐபேங்க், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

மாருதி சுஸுகி வீழ்ச்சி: முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருது சுஸுகி பங்கு விலை 2.65 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்திஏா்டெல், ஏசியன் பெயிண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா, சன்பாா்மா, ஐடிசி ஆகியவை 0.50 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 968 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 630 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 143.25 புள்ளிகள் (1.18 சதவீதம்) உயா்ந்து 12,263.50-இல் நிலைபெற்றது. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டிஎஃப்எம்சிஜி, பாா்மா குறியீடுகல் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.