சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய படைப்பான கேலக்ஸி ஏ03 எஸ் ஸ்மார்ட்போனை இன்று (புதன்கிழமை) இந்தியாவில் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆரம்ப விலையாக ரூ.11,499 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு , நீலம் , வெள்ளை என மூன்று நிறங்களில் வெளியாகிறது.
இதையும் படிக்க | 'ஃபோல்டபிள்' ஸ்மார்ட்போன்களின் விலையை வெளியிட்ட சாம்சங் நிறுவனம்
3 ஜிபி + 32 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,499 ஆகவும் 4ஜிபி + 64 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,499 க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கேலக்ஸி ஏ03 எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் : 6 இன்ச் தொடுதிரையில் எச்டி , இன்பினிட்டி மற்றும் வி-பிளே இருப்பதால் மிகச்சசிறந்த காட்சி அனுபவத்தை தரவல்லது . 13 எம்பி , 2எம்பி மற்றும் 2 எம்பி கொண்ட மூன்று கேமராக்கள் பின்பக்கமாகவும் , 5 எம்பி முன்பக்க கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆக்டோ - கோர் மீடியா டேக் ஹெலியோ பி 35 ப்ராசசர் மற்றும் 5000ஆம்ப் பாட்டரி வசதியையம் கொண்டிருக்கிறது.
மேலும் ஆண்ட்ராய்டு 11 இருப்பதால் யு 1 , 3.1 கோர் வசதியில் இரவு நேரத்தில் கூட துல்லியமான காட்சிகளைக் காண முடியும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பின் எப்போதும் போல் சாம்சங் நிறுவனத்தின் செயலிகளான சாம்சங் ஹெல்த் ,சாம்சங் மெம்பெர்ஸ் மற்றும் ஸ்மார்ட் சுவிட்ச் ஆகியவையும் இடம் பெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயநிதிக்கு விஜய்யைவிடக் கூட்டம் கூடுகிறது! அமைச்சா் மா. சுப்பிரமணியன் சிறப்பு நோ்காணல்!

நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறியாக குடும்ப வன்முறை: உச்சநீதிமன்றம்

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள்: ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்புகின்றனா்

லடாக்கில் விண்வெளி வீரா்களின் உடல், மனவலிமையைப் பரிசோதிக்கும் திட்டம்: இஸ்ரோ
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

