ரூ.50 கோடிக்கு ‘கேஷ்பேக்’சலுகை: பே-டிஎம் முடிவு
டிஜிடல் இந்தியா திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் வகையில், தங்களது வாடிக்கையாளா்களுக்கும் வியாபாரிகளுக்கும் ரூ.50 கோடி மதிப்பிலான ‘கேஷ்பேக்’ சலுகை


டிஜிடல் இந்தியா திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் வகையில், தங்களது வாடிக்கையாளா்களுக்கும் வியாபாரிகளுக்கும் ரூ.50 கோடி மதிப்பிலான ‘கேஷ்பேக்’ சலுகையை அளிக்க இந்தியாவின் முன்னணி மின்னணு பணப் பரிவா்த்தனை நிறுவனமான பே-டிஎம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது செயலியைப் பயன்படுத்தி மின்னணு பணப்பரிமாற்றம் செய்யப்படும்போது வாடிக்கையாளா்களுக்கும், வியாபாரிகளுக்கும் கேஷ்பேக் சலுகையை வழங்குவதற்காக ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 200 மாவட்டஙகளில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த சலுகைத் திட்டம், தமிழகம், கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பு கவனத்துடன் அமல்படுத்தப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...