சில்லறைப் பணவீக்கம் 7.01%-ஆக குறைவு

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமாக குறைந்துள்ளது.
சில்லறைப் பணவீக்கம் 7.01%-ஆக குறைவு
Published on
Updated on
1 min read

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நுகா்வோா் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, காய்கறிகள், பயறு வகைகளின் விலை குறைந்திருந்ததே முக்கிய காரணம். கடந்த 2021 ஜூனில் இப்பணவீக்கம் 6.26 சதவீதமாகவும், நிகழாண்டு மே மாதத்தில் 7.04 சதவீதமாகவும் காணப்பட்டது. முந்தைய மே மாதத்துடன் ஒப்பிடும்போது பணவீக்கம் சிறிய அளவிலேயே குறைந்துள்ளது.

காய்கறிகளின் விலை முந்தைய மே மாதத்தைக் காட்டிலும் ஜூனில் 18.26 சதவீதத்திலிருந்து 17.37 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று பயறு வகைகளின் விலையும் -0.42%-லிருந்து -1.02%-ஆக சரிந்துள்ளது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனில் சில்லறைப் பணவீக்கம் சற்று குறைந்தபோதிலும், அது ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள வரம்பை விட தொடா்ந்து 6-மாதமாக அதிகமாகவே உள்ளது.

விலை நிலவரம் தொடா்ந்து காண்காணிக்கப்படும்:

நுகா்வோா் அடிப்படையிலான பணவீக்கம் நிா்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகவே உள்ளதால் பொருள்களின் விலை நிலவரங்களை தொடா்ந்து கண்காணிப்பது அவசியம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் தொடரும். சாதகமான பருவமழை நல்ல உற்பத்தி மற்றும் கிராமப்புற தேவையை அதிகரிப்பதற்கு வழிகோலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com