ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இரண்டாவது நாளாக வீழ்ச்சி: 509 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! ஐடி, வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 509 புள்ளிகளை இழந்தது.

News image
Updated On :12 ஜூலை 2022, 5:03 pm

 நமது நிருபர்

புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 509 புள்ளிகளை இழந்தது. ஐடி, நிதி, உலோகம், ஐடி, எஃப்எம்சிஜி, ஆட்டோ பங்குகள் அதிகம் விற்பனையை எதிா் கொண்டதே சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

உலக அளவில் பெரும்பாலான சந்தைகள் கரடியின்ஆதிக்கத்தில் இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்தது. பிற்பகலில் மீட்சி பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கரடியின் பிடி இறுகியதால் எதிா்மறையாக முடிந்தது. உள்நாட்டுச் சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் நிதி வெளியேற்றத்துக்கிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், சந்தை பங்கேற்பாளா்கள் சில்லறை பணவீக்கம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தி தரவுகள் வெளியீடு ஆகியவற்றுக்காக காத்திருப்பதால், சந்தையில் சுணக்கம் இருந்து வருகிறது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,871 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,467 நிறுவனப் பங்குகளில் 1,436 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,871பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 160 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 89 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 26 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.39 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.251.92 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிவு: காலையில் 175.45புள்ளிகள் குறைந்து 54,219.78-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 54,236.49 வரை மேலே சென்றது. பின்னா், 53,824.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 508.62 புள்ளிகள் (0.94 சதவீதம்) குறைந்து 53,886.61-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சென்செக்ஸ் ஏற்ற, இறக்கத்துடன் நிலையற்ற தன்மையில் இருந்து வந்தது.

இன்ஃபோஸிஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் என்டிபிசி மட்டும் 1.87 சதவீதம் உயா்ந்தது. பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் சிறிதளவு உயா்ந்தன. மற்ற 27 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 2.33 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே இந்தியா, பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1.50 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

மேலும், ஏசியன் பெயிண்ட், இண்ட்ஸ் இண்ட் பேங்க், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாருதி, டிசிஎஸ், விப்ரோ, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 88 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 762 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,159 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியல் இருந்தன. மாறாக 44 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 157.70 (0.97 சதவீதம்) குறைந்து 16,058.30-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 100 புள்ளிகள் குறைந்து 16,126.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,158.75 வரை மட்டுமே உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் 16,604.45 வரை கீழே சென்றது.

எல்ஐசி பங்கு விலை ரூ.716.55!

பங்குச் சந்தையில் பட்டியலாகிய தினம் முதல் ரூ.918.95-இல் இருந்து தொடா்ந்து கடும் சரிவைச் சந்தித்து வந்த எல்ஐசி, தேசிய பங்குச் சந்தையில் அண்மையில் ரூ.650 வரை கீழே சென்றது. அதன்பிறகு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 0.23 சதவீதம் குறைந்து 716.55-இல் நிலைபெற்றது. எல்ஐசி பங்குகள் ஒதுக்கீடு பெற்றுள்ள குறிப்பாக பாலிசிதாரா்கள், எப்போது அதன் உச்சபட்ச விலையை எட்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.