ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சொமேட்டோ, ஸ்விக்கியே வாங்கத் துடிக்கும் 19 வயது இளைஞர்களின் நிறுவனம்

இணையதள உணவு விநியோகத்தில் முன்னணியிலுள்ள சொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் செப்டோ (Zepto) என்ற இணையவழியில் காய்கறிகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தை வாங்க முனைப்புக் காட்டி வருகின்றன. 

News image
Updated On :4 ஜனவரி 2022, 1:00 pm

DIN

இணையதள உணவு விநியோகத்தில் முன்னணியிலுள்ள சொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் 'செப்டோ' (Zepto) என்ற இணையவழியில் காய்கறிகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தை வாங்க முனைப்புக் காட்டி வருகின்றன. 

கடந்த இரு மாதங்களாக இதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சொமேட்டோ, ஸ்விக்கி வாங்கத் துடிக்கும் 'செப்டோ' நிறுவனம் 19 வயது இளைஞர்களுடையது.

Story image

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக் கழக பொறியியல் படிப்பிலிருந்து இடைநின்ற ஆதித் பலிச்சா, கைவால்யா வோரா ஆகிய இருவர் செப்டோ என்ற இணையவழி நிறுவனத்தைத் தொடங்கினர்.

காய்கறிகளை இணைய வழியில் விநியோகம் செய்யும் பணிகளை அவர்கள் செப்டோ மூலம் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர். 19 வயதேயான இரு இளைஞர்களின் இந்த நிறுவனத்தை தற்போது இணையவழி உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் வாங்குவதற்கு முனைப்புக்காட்டி வருகின்றன.

கடந்த இரு மாதங்களாக செப்டோ நிறுவனத்துடன் சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த இரு நிறுவனங்களின் சலுகைகளையும் செப்டோ நிறுவனத்தைத் தொடங்கிய இளைஞர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய 'செப்டோ' நிறுவனத்தின் நிறுவனர் ஆதித், ''செப்டோ நிறுவனத்தை எந்த நிறுவனத்துடனும் கூட்டுவைத்து நடத்த விரும்பவில்லை. தனியாக செப்டோவை வளர்க்க விரும்புகிறோம். அதற்காக பலதரப்பிலிருந்து 1.1 பில்லியன் டாலர் நிதியுதவி கோரியுள்ளோம்'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.