மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லாபம் 11 சதவீதம் உயர்வு

ஐ.டி. நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம், 10.85 சதவீதம் அதிகரித்து ரூ.3,983 கோடி அதிகரித்துள்ளது.

News image
hcl080702
Updated On :20 ஏப்ரல் 2023, 12:35 pm

DIN


புதுதில்லி: ஐ.டி. நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம், 10.85 சதவீதம் அதிகரித்து ரூ.3,983 கோடி அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,599 கோடியாக இருந்தது.

இருப்பினும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லாபம் காலாண்டு அடிப்படையில் ரூ.4,096 கோடியிலிருந்து 3 சதவீதம் குறைந்துள்ளது.

மார்ச் 2022 காலாண்டில் ரூ.22,597 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் இந்த காலாண்டில் சுமார் 18 சதவீதம் அதிகரித்து ரூ.26,606 கோடியாக உள்ளது.

இருப்பினும், மூன்றாவது காலாண்டில் அதன் வருவாய் ரூ.26,700 லிருந்து சற்று குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.