பங்குச்சந்தைகள் கடும் சரிவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் குறைந்தது!!
இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது.


இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது.
நேற்று(செவ்வாய்க்கிழமை) 60,672.72 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) 60,391.86 என்ற புள்ளிகளுடன் இறக்கத்துடன் தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை குறைந்த நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் 927.74 புள்ளிகள் குறைந்து 59,744.98 என்ற புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 272.4 புள்ளிகள் குறைந்து 17,554.30 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
ஐடிசி பங்குகளின் விலை மட்டும் ஏற்றம் கண்டது. தவிர இதர நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...