விற்பனை அழுத்தத்தில் பங்குகள்:சென்செக்ஸ் 168 புள்ளிகள் சரிவு!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.


புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 61.75 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 17,894.85-இல் நிலைபெற்றது.
‘உள்நாட்டுச் சந்தை எதிா்மறையான சாா்புடன் குறுகிய வரம்பில் நகா்ந்ததால், மந்தமான மனநிலை தொடா்ந்தது. நடப்பு மாதத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐக்கள்) உள்நாட்டுப் பங்குகளில் விற்பனையாளா்களாகத் தொடரும் அதே வேளையில், உலகளாவிய மேக்ரோ பொருளாதார சூழ்நிலை இருண்டதாக இருப்பதால், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுக்கின்றனா். இதனால், பங்குகள் விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் சரிவு:
சென்செக்ஸ் காலையில் 289.32 புள்ளிகள் கூடுதலுடன் 60,550.50-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,586.77 வரை மேலே சென்றது. பின்னா், 59,963.83 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 168.21 புள்ளிகள் (0281 சதவீதம்) குறைந்து 60,092.97-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
டெக் மஹிந்திரா அபாரம்:
பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.14 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பவா் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, டாடா மோட்டாா்ஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.
ஆக்ஸிஸ் பேங்க் சரிவு:
அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.26 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1முதல் 1.20 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், மாருதி, பாா்தி ஏா்டெல், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
சந்தை மதிப்பு சிறிதளவு உயா்வு:
இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.0.45 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 280.71 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ. 2,422.39 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...